எண் 9இல் பிறந்தவருக்குரிய பலன்கள் - செவ்வாய் (Mars)
9ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள் தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். 18ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள் பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர். 27 ம் திகதியில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது. மேலும் 9 எண்ணிற்கான பலன்கள் இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவ...